பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோற்றுவாய் கெடிலம் ஆற்றைப் பற்றிக் கெடிலக் கரை நாகரிகம்’ என்னும் பெயரில் ஐம்பத்தொரு விளக்கப் படங்களுடன் 650 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை எழுதி 1975-ஆம் ஆண்டு யான் வெளியிட்டேன். அதன் சுருக்கமாகக் கெடில வளம் என்னும் பெயரில் ஒரு வழிநூல் பின்னர் வெளியிடப்பட்டது. இப்போது காவிரியாற்றுப் பக்கம் சிறிது கவ னத்தைத் திருப்பியுள்ளேன். காவிரி ஆற்று நீர்ப்பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாட்டுக்கும் கருநாடக நாட்டுக் கும் இடையே முரண்பாடு நிலவும் இந்தக் (198 ) காலத் தில் இந்த நூல் தக்க பயனளிக்கும் என எண்ணுகிறேன். இதற்காக மட்டும் இந்நூல் எழுதப்படவில்லை; கெடிலத்தைப் பற்றி எழுதிய யான் காவிரியைப் பற்றி யும் நூல் எழுதவேண்டும் என்ற அவாவால் இதை எழுதி னேன். இந்த வறிய காலத்தில் பக்கக் கட்டுப்பாடு . விலைக் கட்டுப்பாடு மக்களின் வாங்கும் வளமை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு இந்நூலை மிகவும் சுருக்கமாகவே அமைத்துள்ளேன். எனினும், சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்றபடி இந்நூலில் போது மான செய்திகள் சுருக்கமாக இடம் பெற்றிருக்கும். இற்றைக்கு (1988) ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு கட்கு முற்பட்ட சங்க காலத்திலிருந்து இருபதாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/7&oldid=880445" இலிருந்து மீள்விக்கப்பட்டது