பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 கொள்ளலாம். ஒரு காலத்தில், ஒன்றிய அமெரிக்க (U.S.A.) நாட்டில் அளவின்றிக் கோதுமை விளைந்து விட்டதாகவும், அதனால் ஒரு பகுதியைக் கடலில் கொட்டி விட்டதாகவும் செய்தித்தாளில் வெளியான செய்தி ஈண்டு நினைவு கூரத்தக்கது. இத்தகைய சோழ நாடு, காவிரியில் தண்ணீர் விடாமையால் இப்போது எப்படி இருக்கிறது? - " மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும்

  • - - - - - தண்ணறுங் காவிரி-சிலம்பு-5 : 163, 165

' வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி'-சிலம்பு-7-27. காவிரி சோழ நாடாகிய குழந்தையை வளர்க்கும் தாயாக உள்ளதாம். உலகம் அழியும் வரை ஒழியாது காக்குமாம். - “பரப்பு நீர்க்காவிரிப் பாவைதன் புதல்வர்'ட - சிலம்பு-10-148. இங்கே, சோழநாட்டு மக்கள் காவிரித்தாயின் புதல்வர்கள்-பிள்ளைகள்-எனக் கூறப்பட்டுள்ளனர்: பெரிய புராணம்-திருநாட்டுச் சிறப்பு : “ சைய மால்வரை பயில் தலைமை சான்றது செய்ய பூமகட்கு நற்செவிலி போன்றது வையகம் பல்லுயிர் வளர்த்து நாள்தொறும் உய்யவே சுரந்தளித்து ஊட்டும் நீரது” (33)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/70&oldid=1018992" இலிருந்து மீள்விக்கப்பட்டது