பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71 விட்டு மக்களை விரும்பும் தாய்போல் நாட்டு மக்களை நலமுடன் பேணி...... - இயங்கும் காவிரி' அம்பிகாபதி காதல் காப்பியம்-நாடு நகர் நலங்கூறு. காதை-98; 99. வீட்டில் தாய் சேய்களைக் காப்பதுபோல, நாட்டில் காவிரி மக்களைக் காக்கிறதாம். காவிரி உயிர்களைக் காப்பதால்தான் காவிரித் தாய் என்னும் சிறப்புப் பெயர் வழங்கப் பெற்றுள்ளது. கலங்கல் காவிரி காவிரி நீர் வளமான வண்டலுடன் கலங்கிய நிலை யில் இருப்பதால்தான், வயல்களில் விளைவு பெருகு கிறது. இலக்கிய ஆட்சிகள் இதோ : "தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கத்துள் ஒங்கும்’ தொண்டரடிப் பொடி யாழ்வார்-திவ்வியப் - பிரபந்தம்-(908) திருவரங்கத்துப் பக்கம் ஒடும் காவிரியில் தெளிவு இல்லாத கலங்கல் நீர் உள்ளதாம். "செங்குணக்கு ஒழுகும் * > கலுழி மலிர் நிரை காவிரி’ பதிற்றுப் பத்து-50-5. கலுழி என்றால் கலங்கிய வண்டல் நீர். இதனால் கலுழி நிரை காவிரி எனப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/73&oldid=1018995" இலிருந்து மீள்விக்கப்பட்டது