பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72 "வாச நீர்குடை மங்கையர் கொங்கையில் பூசு குங்கமமும் புனை சாந்தமும் - - விசு தென்திரை மீதிழிந் தோடுநீர் தேசுடைத் தெனினும் தெளிவில்லதே' - பெரியபுராணம்-58 காவிரி நீர் பளபளப்பான தோற்றம் உடைய தாயினும் தெளிவு இல்லாத தாகும். இயற்கையான வளத்தால் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், ஆசிரியர் சேக்கிழார், மங்கையர் கொங்கையில் பூசிய குங்குமமும் சந்தனச் சாந்தும் குளிக்கும்போது நீரில் கரைவதால், தெளிவு இல்லாமல் உள்ளது என ஒரு கற்பனை செய் துள்ளார். உண்மை தெளிவின்மையே. . . ; வயலெல்லாம் வளம்தரும் வண்டல் உள்ண் ஊட்டி . இயங்கும் காவிரி'- அம்பிகாபதி காதல் காப்பியம். நாடு நகர் நலங்கூறு காதை-97 . காவிரி வயல்கட்கு வண்டலாகிய உணவை மட்டு கிறதாம்; அதனால் வளம் உண்டாகிறதாம். N - - காவிரி நீர் கலங்கலாகவே இருக்கும். ஒருநாள் இரவு படுக்கைக்குப் போகுமுன், யான், ஒரு செம்பு நிறையக் காவிரி நீரை முகந்து வைத்திருந்தேன். மறு நாள் காலையில் பார்த்தபோது, செம்பின் அடியில் கால்பங்கு சேறும், மேலே முக்கால் பங்கு தெளிந்த நீரும் இருந்ததைக் கண்டேன். இத்தகைய வண்டலே, காவிரி நாட்டை வளநாடு’ என்னும் பெயருக்கு உரியதாக் கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/74&oldid=1018996" இலிருந்து மீள்விக்கப்பட்டது