பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76 செலவுக் கணககு காவிரியிலிருந்து கொள்ளிடம் பிரிவதற்கு முன்பே கால்வாய் பிரிந்து குளித்தலைப் பகுதிக்கு நீர் அளித்துப் பின் மாமுண்டி என்னும் ஆற்றில் கலக்கிறது. பின் அதோடு சேர்ந்து திருச்சிராப்பள்ளிக்கு அருகே உய்யக் கொண்டான் ஆற்றோடு சேர்கிறது. - • கொள்ளிடம் காவிரியிலிருந்து பிரியும் முதல் பெரிய ஆறு கொள்ளிடம். இதன் பெயரிலிருந்தே இது மிக்க நீர் கொள்ளக் கூடியது; காவிரியின் பெரு வெள்ளத்தைப் பங்கிட்டுக் காக்கக் கூடியது என்பது விளங்கு ம் கொள்ளிடம் பிரிந்ததுமே அதன்மேல் மேலணை என்னும் அணை 1840 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த இடத்திற்கு 108 கி. மீ. தொலைவுக்கு அப்பால் கொள் வளிடத்தில் கீழணை என்னும் அணை கட்டப்பட்டுள்ளது. மேலணை திருச்சி, தஞ்சை மாவட்டங்களைக் கவனித்துக் கொள்கிறது என்றால், கீழணையோ தென் னார்க்காடு மாவட்டத்தின் தென்பகுதியைக் கவனித்துக் கொள்கிறது. பிரிந்த காவிரியையும் கொள்ளிடத்தையும் 27 கி. மீ. தொலைவிற்குப் பிறகு உள்ளாறு என்னும் ஆறு இணைக் கிறது. இந்த உள்ளாற்றின் குறுக்கே கல்லணை என்னும் அணை கட்டப்பட்டுள்ளது. இது கரிகாலன் காலத்திலேயே கட்டப்பட்ட மிகவும் பழைய அணை என்றும் சொல்லப்படுகிறது. கல்லணைக்கு அருகே கொள்ளிடத்தின் வலப்பக்கம் தெற்கு ராச வாய்க்கால் என்னும் நீரோட்டம் பிரிந்து சீர்காழிப் பகுதியை வளப்படுத்துகிறது; இடப்பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/78&oldid=1019002" இலிருந்து மீள்விக்கப்பட்டது