பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77 வடவாறு, வடக்கு ராச வாய்க்கால் Tru67 பிரிந்து சிதம்பரம் பகுதியை வளப்படுத்துகிறது. வடவாற்றி லிருந்து பெரிய வீராணம் ஏரிக்குத் தண்ணீர் செல்கிறது. இலமனூருக்கு அருகில் முக்கொம்பு என்னும் இடத் திலிருந்து பிரியும் கொள்ளிடம் திருச்சி மாவட்டத்தி விருந்து தஞ்சை மாவட்டம் வழியாகத் தென்னார்க் காடு மாவட்டத்தை அடைந்து தேவிக் கோட்டை என்னும் இடத்திற்கு அருகே கடலில் கலக்கிறது. கொள்ளிடத்தின் மொத்த நீளம் 47 கி. மீ. ஆகும். மேட்டுர்த் தேக்கத்திற்குத் தென்பகுதியில் மாயக் கொண்டான் என்னும் இடத்திற்கு அருகில் உய்யக் கொண்டான் கால்வாய் பிரிகிறது. வடக்குப் பக்கம் ஐயன் வாய்க்கால், பெரு வாளை வாய்க்கால் என்பன பிரிகின்றன. கல்லணையிலிருந்து ஒரு கால்வாய் பிரிந்து (சுமார்) மூன்று நூறாயிரம் ஏகராவிற்கு மேலும் பாசன வசதி செய்கிறது. இக்கால்வாய் 1 கி. மீ. தொலைவு ஓடிய பின் இரண்டாகப் பிரிகிறது. அவற்றுள் ஒன்று சேலம்ஓமலூர்ப் பகுதியையும், மற்றொன்று கோவைபவானிப் பகுதியையும் வளப்படுத்துகின்றன. கல்லணை தாண்டி ஒடுகையில் காவிரியிலிருந்து வெண்ணாறு பிரிகிறது. வெண்ணாற்றிலிருந்து போகிற போக்கில் வெட்டாறு, வடவாறு, கோரையாறு, பாமணியாறு, பாண்டவ ஆறு, வெள்ளாறு அரிசிலாறு. முடி கொண்டான் ஆறு முதலியன பிரிகின்றன. மற்றும், இவற்றிலிருந்து புத்தாறு, சோழ சிகாமணி ஆறு, பழ வாறு, முள்ளி ஆறு, ஒடம் போக்கி ஆறு முதலியன பிரிகின்றன. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/79&oldid=1019003" இலிருந்து மீள்விக்கப்பட்டது