பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6 நூற்றாண்டு வரை உள்ள பல இலக்கியங்கள் இந்நூலை எழுத எனக்குக் கை கொடுத்துதவியுள்ளன. காவிரி நீர்ப் பங்கீடு பற்றியும் இங்கே ஒரளவு குறிப் பிடவேண்டியுள்ளது. கி.பி. 1924ஆம் ஆண்டு அப்போதி ருந்த மைசூர் மாநில அரசுக்கும் சென்னை மாநில அரசுக்கும் இடையே ஏதோ ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும், அது ஐம்பதாண்டு காலத்திற்குச் செல்லுபடி யாகும் என்று தீர்மானிக்கப்பட்டது என்றும், இப்போது அந்தக் காலக்கெடு முடிந்துவிட்டதால் முன்போல் தமிழ்நாட டிற்குத் தண்ணிர்விட முடியாது என்று கருநாடக அரசு சொல்லுகிறதென்றும் செய்திகள் பரவ லாகப் பேசப்படுகின்றன- எழுதப்படுகின்றன. ஆனால், அந்த 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் பின்வரும் குறிப்பு கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மறந்துவிட முடியாது. அவை : - 1. மைசூர் அரசு காவிரி தொடர்பாகக் கடைப் பிடிக்கும் எந்தத் திட்டத்தாலும், தமிழ்நாட்டிற்குத் தண்ணிர் இழப்பு ஏற்படலாகாது. 2. தமிழ்நாட்டில் 3,01,000 ஏகரா நிலப்பரப்புக்கு வேண்டிய 9,350 கோடி கனஅடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் (இதுதான் மேட்டுர் அணை). - 3. 1,25,000 ஏகரா அளவுக்கு வேண்டிய 4,800 கோடி கனஅடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தை (கிருஷ்ண ராச சாகரம்) மைசூர் அரசு கட்டிக் கொள்ள லாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/8&oldid=1018880" இலிருந்து மீள்விக்கப்பட்டது