பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

13. காவிரியில் நீர் குறைதல் இப்போது காவிரியில் போதிய நீர் விடுவதில்லை. அதனால் நீர் குறைவாயுள்ளது. நீர் நிரம்ப விடப்பட்ட காலத்திலும், கோடையில் நீர் விடுவதை நிறுத்தி விடு வார்கள், கோடையில் வயல்கட்கு ஓய்வு ஆதலின். அணையைத் திறக்காமல் மூடி விடுவார்கள் இதை, 1936 முதல் 1940 வரை காவிரிக் கரையிலே வாழ்ந்த யான் நேரில் கண்டுள்ளேன்; கோடையில் ஒரு சிறிதும் நீர் இருக்காது; மாலையில் விளையாடுவதும் அமர்ந்து படிப்பதும் செய்தேன். ஊற்றுக் குழி தோண்டியே நீர் எடுப்பேர்ம் இது அணைகள் மூடிய காலத்தது. காவிரியின் தொடக்கத்திலிருந்து முடிவுவரை அணைகள் கட்டாதிருந்த மிகவும் தொன்றுதொட்ட பழங்காலத்தில், மழை பெய்யும் போது ஆற்றில் நிரம்ப நீர் ஓடிக் கடலில் கலந்து மறைந்து விடும். மழை யில்லாத காலத்தில், காவிரி நீர் வடிந்த இடங்களில் வரி வரியாய்க் கரு மணல் தெரியும். இதற்கு அறல் என்பது பெயர். இந்த அறலைப் பெண்டிரின் கரிய கூந்தலுக்கு ஒப்புமையாகப் புலவர்கள் புகல்வர். இதனைப் பின்வரும் அகநானூற்றுப் பாடல் பகுதியால் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/81&oldid=1019005" இலிருந்து மீள்விக்கப்பட்டது