பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81 காவிரியைப் பற்றி ஒரு கற்பனை செய்துள்ளார். கடலில் தோன்றிய நஞ்சைச் சிவன் உண்டார் என்பது ஒரு புராணக்கதை. கடலானது சிவபெருமானுக்குக் கொடிய நஞ்சினை அளித்ததால், அந்தப் பொல்லாத கடலுக்கு நிறையத் தண்ணிர் கிடைக்கச் செய்யலாகாது எனக் காவிரியாறு கருதி, வழியிலேயே பல கிளையாறுகளின் வாயிலாகவும் பல கிளை வாய்க்கால்களின் வாயிலாக வும் தண்ணிரை வயல்கட்கு அளித்துச் செலவிட்டு, கடல் வயிற்றை நிறைக்காமல் சிறிதளவு நீரை மட்டும் கடலில் கலக்கச் செய்ததாம். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட சங்க காலத்தில் கடற்கரையை மோதிக் குத்திக் கொண்டு கடலில் காவிரி புகுந்ததாகச் சொல்லப்பட் டுள்ளது. பின்னர்ப் பல அணைகள் கட்டப்பட்டுப் பல கர்ல்வாய்களாப்பிரிந்த நிலைமை, சேக்கிழார் கால மாகிய பன்னிரண்டாம் நூற்றாண்டு நிலைமையாகும். மற்றும், கடல் வயிறு நிறையாத காவிரி என்பதில் ஒரு கருத்துக் குறிப்பு உள்ளது. கடலில் அளவற்ற நீர் இருப்பினும் புதுத் தண்ணீர் கிடைக்காதாயின் கடலும் தின் நீர்மை குன்றிவிடும். மேலே பெய்யும் மழையின் மூலமாகவோ, பெய்யப்பட்டு ஆறுகளின் மூலம் கலக்கும் நீரின் மூலமாகவோ தான் கடல் தன் நீர்மை குன்றாமல் வளமுடன் நிகழ்கிறது என்பது தான் அந்தக் கருத்துக் குறிப்பு. - - - "நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்” (17) - என்னும் திருக்குறட்பாவாலும் அறியலாம். இப்போது அண்டைப் பகுதியினர் நீர் விடாததால் எப்போதுமே காவிரியில் நீர் குறைகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/83&oldid=1019007" இலிருந்து மீள்விக்கப்பட்டது