பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

14. காவிரிக்குக் கரை கட்டினமை ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருகி இரு கரை மருங்கிலும் உள்ள வயல்களையும் ஊர்களையும் அழித்துக் கொண்டு ஒடுவதை, இந்தக் காலத்திலும் நேரிலும் செய்தித்தாள் வாயிலாகவும் அறிகிறோம். பண்டு இந்த நிலைமை காவிரிக்கும் இருந்தது. பார்த் தான் கரிகாலன்; எண்ணினான் கரை கட்ட காவிரியின் இருமங்கும் கரைகட்டி முடித்தான். இது தொடர்பாக இரண்டு விதமான விவரங்கள் தரப்பட்டுள்ளன: கரிகாலன் இலங்கையை வென்று சிறை பிடித்த பன்னிரண்டாயிரம் சிங்களர்களை இந்த வேலைக்குப் பயன்படுத்திக் கொண்டானாம். காவிரியின் இரு மருங்கும் - ஆங்காங்கிருந்த சிற்றரசர்கட்கு இடத்தைப் பங்கிட்டுத் தந்து கரையடைக்கச் செய்தானாம். மூன்று கண்களுடைய திரிலோசன்’ என்னும் சிற்றரசன் மட்டும் தன் பங்கில் கரை கட்ட மறுத்தானாம். செய்தியறிந்த கரிகாலன் திரிலோசனனது (முக்கண்ணனது) உருவத்தைப் படமாக எழுதச் செய்து, அவனுக்கு மூன்று கண்கள் இருப்பதைக் கண்டானாம். ஒ! இதனால்தான் இவன் செருக்குற்றிருக்கிறான் என்று எண்ணிக் கால் மிதியடி யால் படத்தில்-நெற்றியில் இருந்த மூன்றாவது கண்ணை மிதித்தானாம். உடனே எங்கோ இருந்த திரிலோசன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/84&oldid=1019008" இலிருந்து மீள்விக்கப்பட்டது