பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

88 'வட பகீரதி குமரி காவிரி யமுனை கெளதமை மகர மேய் தட மகோததி யிவை விடாதுறை தருண மாதர் - - கடைதிறமினோ' குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்-கண்ட திறப்பு-31. - பகீரதி= கங்கை. மேலுள்ள இருபாடல்களிலும் சிறந்த ஆறுகளின் வரிசையில் கங்கையும் காவிரியும் உள்ளமை காணலாம். "திங்கள் சூடிய முடிச் சிகரத் துச்சியில் பொங்கு வெண்டலை நுரை யொருது தோன்றலால் எங்கள் நாயகன் முடிமினச நின்றேயிழி கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே” பெரிய புராணம் - 55 பொன்னியாகிய கன்னியின் வெள்ளம், திங்கள் அளவு உயர்ந்துள்ள மலை உச்சியிலிருந்து தோன்று தலால், திங்கள் சூடிய சிவனது முடியிலிருந்து இழிகின்ற கங்கை போன்றுள்ளதாம். "பாணலந் துறைப் பொன்னிநீர் படிந்து வந்தாரோ தூநறுஞ் சடைக் கங்கை நீர்தோய்ந்து வந்தாரோ பெரிபுராணர் 518-அமர்நீதி நாயனாரிடம் வந்த சிவனடியாரைப் பற்றியது இது. 'பூவிரி பொலன் கழல் பொருவில் தானையான் காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇத் தாவர சங்கமம் என்னும் தன்மைய யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/90&oldid=1019018" இலிருந்து மீள்விக்கப்பட்டது