பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89 (க ம்பராமாயணம்-அயோத்தியா காண்டம்-கங்கை காண் படலம், கம்பரும், கங்கைப் புறத்து நாட்டைக் காவிரிநாடு போன்றது எனப் புகழ்ந்துள்ளார். மாகவி சுப்பிரமணிய பாரதியார், பாரத தேசம் என்னும் தலைப்புடைய தமது பாடலில், கங்கையையும் காவிரியையும் புதுமையான முறையில் இணைத்துக் காட்டியுள்ளார்; "கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’-6 கங்கைப் பகுதியில் விளையும் கோதுமைப் பண்டத் தைக் காவிரிப் பகுதியில் விளையும் வெற்றிலைக்கு மாற் றாகக் கொடுப்போம்-அதாவது பண்டமாற்று செய் வோம் என்பது கருத்து. - பாரதிதாசனார் மட்டும் விட்டாரா என்ன! 'சங்க நாதம் என்னும் தமது பாடலில், "கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்”, எனக் கங்கையையும் காவிரியையும் இணைத்துக் காட்டி யுள்ளார். - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், 'வற்றலில் கங்கை காவேரி வளஞ்செய் பரத நாட்டினிலே’ (மலரும் மாலையும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/91&oldid=1019019" இலிருந்து மீள்விக்கப்பட்டது