பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90 "கங்கை யமுனை காவிரி முதலிய வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும்” என இரண்டையும் இணைத்துள்ளார். இப்போது, கங்கையைக் காவிரியோடு இணைக்க வேண்டும் என்பதாக நமது நாட்டில் வெல்லம் தடவிப் பேசப்படுகிறது. இது நடைபெறின், வடக்கே வெள்ளமும் தெற்கே வறட்சியும் இன்றி நாடு முழு நலம் பெறும். கங்கையைக் காவிரியுடன் இணைக்காவிடினும், ‘தென்கங்கை எனப் புகழப் பெறுகின்ற காவிரி நீரையா யினும் தமிழ்நாட்டிற்குப் போதிய அளவில் விட்டாலே போதுமே என்று ஏங்குகிறது தமிழகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/92&oldid=1019020" இலிருந்து மீள்விக்கப்பட்டது