பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

16. மலைத் தலைய கடல் காவிரி 'மலைத் தலைய கடல் காவிரி” என்னும் பாடல் அடி பட்டினப் பாலை (6) என்னும் நூலில் உள்ளது; மலை தொடங்கிக் கடல்வரை ஒடிக் கலக்கும் காவிரி ஆறு - என்பது இதன் பொருள். தலை என்பது தொடக்க மலை உச்சியைக் குறிக்கிறது. காவிரியின் தொடக்கப் பகுதிக்குத் தலைக் காவிரி என்னும் பெயர் வழங்கப்படுவது ஈண்டு எண்ணத் தக்கது. காவிரி, தொடக்க மலைப் பகுதியிலிருந்து முடியும் கடல் பகுதி வரையும் உள்ளவர்க்கு எல்லாம் சமமான உரிமை உடையது என்பது இதனால் பெறப்படும். மேலும், காவிரியின் தோற்றத்தையும் முடிவையும் குறிக்கும் இலக்கிய ஆட்சிகள் சிலவற்றை ஈண்டு காணலாம்: “தேறுநீர்ப புணரியொடு ஆறு தலைமணக்கும். மலி ஒதத்து ஒலி கூடல்.’’ ப-பாலை-97,98 புணரிசகடல். மணத்தல் = கூடுதல். புணரியை ஆறு மணக்கும் கூடலாம். கூடல்=சங்கமம். ஈண்டு, 'மண்த்தல் கூடுதல்’ என்னும் சேந்தன் திவாகர நூற்பா (செயல் பற்றிய பெயர்த் தொகுதி) ஒப்பு நோக்கத் தக்கது. 'குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி கடல் மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப” மலைபடு கடாம்-527-28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/93&oldid=1019021" இலிருந்து மீள்விக்கப்பட்டது