பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92 குடமலை=குடகில் உள்ள சையமலை. கயவாய் = முகத்துவாரம்: 'மழைமருள் பஃறோல் மாவண் சோழர் கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை” - அகம்-123:10, 11 கடல் மண்டு பெருந்துறை-முகத்துவாரப்பகுதி “மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலைநாள் மாமலர் தண்துறை தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று” அகம் 126 :3-5 காவிரியாறு, கடல்கரையைக் குத்திக் கரைத்து மெலியச் செய்யுமாம். 'குடா அது * பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பின் பூவிரி புதுநீர்க் காவிரி” -புறம் 16:25-26 குடா அது=மேற்கு. மேற்கு மலையிலிருந்து காவிரி தோன்றுகிறது. . "கடல் மண்டு பெருந்துறைக் காவிரி. மணி-5-39 "காவிரி வாயில்-மணி.2.4 "தாழ்பொழில் உடுத்த பண்பதப் பெருவழிக் காவிரி வாயில் கடைமுகங் கழிந்து” . - -சிலம்பு 10-32, 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/94&oldid=1019023" இலிருந்து மீள்விக்கப்பட்டது