பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

93 மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப் பிட்டுள்ள காவிரி வாயில் என்பது முகத்துவாரமாகும். 'சாறயர் களத்து வீறுபெறத் தோன்றிக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று” -சிலம்பு 6:162-63 "குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்” -சிலம்பு-10:106.108 காவிரிப் புதுநீர் கடல் முகத்துவாரத்தை நெரிக் கிறதாம். "கொள்ளும் குடகக் குவடு அறுத்திழியத் தள்ளும் திரைப் பொன்னி தந்தோன்.” வி.சோ.உலா-23,24 குடகு மலை உச்சியை அறுத்துக் கொண்டு காவிரி நீர் இழிந்து வரும்படிச் செய்தவன் ஒரு சோழ மன்னன் என்பதாக விக்கிரம சோழன் உலா கூறுகிறது. சைய மால்வரை பயில் தலைமை சான்றது? பெ.பு,-12 தலைமை சான்றது என்பதில் தலைக் காவிரி” என்னும் குறிப்பு உள்ளது. 'கடலொடு வாய் மடுத்து எதிரெடுப்ப வருபுனல் காவிரி’ முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்-சிறு பறைப் பருவம்-2. வாய் மடுத்தல் என்பது, காவிரி நீர் கடலோடு கலத்தலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/95&oldid=1019025" இலிருந்து மீள்விக்கப்பட்டது