பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

17. காவிரிக் கரைச் சூழல் குடகு மலை முதல் வங்கக் கடல் வரை ஒடுகின்ற நீளக் காவிரிக் கரைச் சூழலில் உள்ள-குறிப்பிட்ட சில இடங்களைப் பற்றிய சுருக்கமான விவரங்களைக் காண்பாம். - மெர்க்காரா: இது குடகு நாட்டின் தலை நகரம்; வளம் செறிந்த மலைப்பகுதி. இங்கே மழை மிகுதி. இதனால் காவிரிக்கு நீர்வளம் கிடைக்கின்றது. காவிரி தோன்றும் தலைக் காவிரிப் பகுதிக்கும் மெர்க்காராவிற் கும் இடையில் உள்ள தொலைவு 40 கி.மீ. ஆகும். தலைக் காவிரி: இதுதான் காவிரி தோன்றும் இடம். அதனால் இதற்கு இப்பெயர் இடப்பட்டது. இங்கே காவிரித் தாய்க்கும் அகத்தியருக்கும் கோயில்கள் உள்ளன. பாக மண்டலம் : இது மிக்க சோலைகள் சூழ்ந்த சிறு நகரம். நகர் நிழல் உடையதாக இருக்கும். இங்கே சிவன், திருமால், பிள்ளையார், முருகன் ஆகியோருக்குக் கோயில்கள் உண்டு; சிவன் பெயர் பாகண்டேசுவரர். இந்த இடத்தில்தான், காவிரி, ஆறு என்ற பெயர் பெறும் அளவுக்கு உருவாகியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/97&oldid=1019027" இலிருந்து மீள்விக்கப்பட்டது