பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

96 திப்பூர் : இங்கே காவிரியில் ஹேமவதி என்னும் சிறு ஆறு கலக்கிறது. பைரபூர் : இங்கே இலட்சுமண தீர்த்தம் என்னும் சிற்றாறு காவிரியில் சேர்கிறது. பாலூர் : இங்கே சித்திரை, ஐப்பசி ஆகிய திங்கள் களில் காவிரியில் நீராடுதல் மிகவும் நல்வினையாகப் (புண்ணியமாகப்) போற்றப்படுகிறது. இப்பகுதியில் தான் கருகண்டகி ஹோலி என்னும் ஆறு காவிரியில் கலக்கிறது. - மைசூர் : இது பழைய மைசூர் அரசின் தலைநக ராய் இருந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகும், .ெ பங் க ளு ர் தலைநகராவதற்கு முன்வரையும் மைசூரே தலைநகராயிருந்தது. மகிஷாசூர் என்பதே மைசூர் என மருவியதாகச் சொல்லப்படுகிறது. மகிஷம் என்றால் எருமை. பண்டைய பெயர் எருமையூர் என் றிருக்கலாம். இந்தப் பகுதி எருமை நாடு என்று அழைக்கப்பட்டதும் உண்டு. மைசூர் அரசரின் அழகு அரண்மனை ஈண்டு உள்ளது. இங்கே நடக்கும் தசரா விழா மிகவும் பெயர் பெற்றது. இந்நகருக்குச் சில கல் தொலைவில் கண்ணம்பாடி அணை உள்ளது. கண்ணம்பாடி : இங்கேதான் கிருஷ்ண ராச சாகரம் என்னும் பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இங்கே பிருந்தாவனம்’ என்னும் அழகிய சோலைப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. நாடோறும் எண்ணற்ற மக்கள் இங்கே வந்து அழகுக் காட்சியைக் கண்டு களிப்பர். இதற்கு வடிவமைப்பு தந்தவர் விசுவேசுவர ஐயா என்பவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/98&oldid=1019029" இலிருந்து மீள்விக்கப்பட்டது