பக்கம்:தமிழ்க் காதல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

தமிழ்க் காதல்


வாய்ப்படுதல் கூடாது என்ற விழிப்புத்தான் முதிய அன்னையின் கடுமைக்குக் காரணம். சிலரும் பலரும் மூலை முடுக்கெல்லாம் கூடிநின்று மகளைப்பற்றிச் சாடையாகவும் நேராகவும் பேசும்போது, அங்ங்னம் பேச நடந்துகொண்ட மகள்மேல் எவ்வன்னைக்குத்தான் சினம் கனலாது? சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டிர் அம்பல் துாற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை (நற். 149) நொதுமலர் வரைவு "காதல்நெறி மெத்தெனச் செல்வதன்று. பெற்றோர்கள் வேற்று மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, காதற் பெண்மக்கள் கட்டாயம் மறுக்கின்றனர்; பழிக்கின்றனர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று அடக்கம் மிக்க நன்மகள் கூட, அயலவனை - அல்லவனை மணக்க ஒருபோதும் ஒப்புவதில்லை” எனப் பேராசிரியர் ஆர்போர்டு 'செகப்பிரியர் கண்ட காதலும் மணமும்’ என்னும் நூலில் அரிய உண்மையை மொழிகின்றார். இங்ங்னம் பெற்றோர் இயல்பாக மணம்பேசும் சமூகப்போக்கில் ஒரு பெண் தன் கற்பைக் கட்டாயம் வெளிப்படுத்திக் காக்கவேண்டும் சூழ்நிலை அமைந்திருப்பக் காண்கின்றோம். ஆண் வீட்டார் தலைமுடி யணிந்து தண்டுன்றிய கிழவர்களை ('தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர் குறுந் 146) பெண் வீட்டிற்கு மணம்பேச விடுப்பது தமிழக மணமுறை. பெண் கேட்க வருவாரைப் பெண் பெற்றார் நன்று நன்று என்று முகமலர்ந்து வரவேற்பர். நற்காலமாக அங்ங்னம் வந்த ஆண் வீட்டார் தலைவியோடு களவுத் தொடர்புடைய தலைவன் வீட்டவராகவே அமைந்து விடுதலும் உண்டு. N. - கொடிச்சி கூந்தல் போலத் தோகை அஞ்சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன் வந்தனன் எதிர்ந்தனர் கொடையே அந்திங் கிளவி பொலிகநின் சிறப்பே (ஐங். 300) தலைவன் வந்தான் உடன்பட்டனர் என்பதனால், என்னாகுமோ என்று அஞ்சிய அரிய காரியம் விரைவாக இனிமையாக எளிமையாக நடந்துவிட்டது என்ற மகிழ்ச்சிக் குறிப்புப் பெறப்படும். மகிழ்வுற்ற தோழி தலைவியை மகிழ்வூட்டிப் பொலிக என வாழ்த்துகின்றாள். 1. Shakespear's Treatment of Love and Marriage, p. 15

। - Professor C.H. Herford.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/78&oldid=1238339" இலிருந்து மீள்விக்கப்பட்டது