பக்கம்:தமிழ்க் காதல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ்க் காதல்



கொடுத்தனெ மாயினோ நன்றே இன்னும் ஆனாது நன்னுதல் துயரே (ஐங். 258)

தலைவன் நெடுநாள் களவொழுக்கம் ஒழுகினான்; வரைவை நீட்டித்தான். இது தலைவிக்குத் துயரைத் தந்தது. பல முறை தோழி இடித்துரைத்தபின், இன்று வரைவு பேசச் சுற்றத்தாரை அனப்பியுள்ளான். இந்த நிலையைத் தெரியாமல் பெற்றோர் மறுக்கலாயினர். இது தலைவிக்கு மேலும் துயரை விளைத்தது. தோழி இடைப்புகுந்து அவனே உண்மையுணர்ந்து வரைவு வேண்டியபொழுது, நீவிர் உண்மையுணராமல் கொடுக்க மறுக்கலாமா? எனப் பெற்றோர்க்கு அறிவுறுத்தக் காண்கிறோம். கற்புக்குக் கேடு வரும்போது பெண்ணுக்குப் பெரும் துணிவு வரும். ஒழுக்கத் துணிவைப் பெற்றோரும் வரவேற்பர். ஒருத்தனோடு உறவுடையாள் என்று அறிந்தபின் மகளின் கற்பு மாசுபட மாற்றவனுக்கு மணம்பேச நினையார். தெய்வச் செயலென்று மகிழ்ந்து உற்றவனுக்கே திருமணம் செய்வர். "தெய்வமால் காட்டிற்று இவட்கென, நின்னை அப்பொய்யில் பொதுவற்கு அடை சூழ்ந்தார், தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு” (கலி.107) மகள் குமரப்பருவம்-குமரமை-எய்தியபின், பெற்றோர் இயல்பாகவே திருமணம் பேசத் தொடங்குவர்: பேசவருவாரை முகனமர்ந்து வரவேற்பர் தக்கான் எனத் தம் மனத்துக்கு உகந்த ஒர் ஆடுஉவிற்கு வரைந்து கொடுப்பர். இது உலகப் பொதுமுறை. தம் மகள் களவில் ஒருத்தனோடு பிணைப்பு உடையளா? இல்லையா? என்று முன்னர் அறிந்து மணம்பேச முடியுமா? இவ்வையப்பாடு எப் பெற்றோர்க்கும் எழாது. எழுவதும் நாகரிகமன்று. ஆதலின் சமுதாய வழக்கப்படி தாய்தந்தையர் ஒருவனுக்கு மனங்காணவே முயல்ப; எனினும் இம் மரபியலோடு களவுக் குமரிக்கு ஒரு போராட்டம் வந்தே தீரும். தன்னளவில் அவள் மரபுப் போராடித்தான் கற்பைக் காத்தல்வேண்டும். பெற்றோராயினும் அவர்தம் முடிபை மாற்றியோ மறுத்தோ எதிர்த்தோதான் வாழ்வைக் கைப்பற்ற வேண்டும். இன்றேல் சாதல் வேண்டும். வெறியாட்டும் நொதுமலர் (அயலவர்) வரைவும் களவுடை நங்கையின் கற்பைச் சோதிக்கும் சமுதாயக் களங்கள் என்றாலும், தலைவியின் காதல் நோக்குத் தெய்வமூலம் கூறும் வெறியாட்டைக் கற்புக்கு மாசாகச் சமூகம் கருதுவதில்லை. சமூகம் மாசு கருதா நிலையில் தலைவியும் வெறியாட்டுப்பற்றி அத்துணைக் கவல்வதில்லை. அது நடைபெறாது தடுக்க முந்துதலும் உண்டு. தடையின்றி நடந்தொழிய விட்டு விடுதலும் உண்டு. வெறியாட்டு ஒரு கேலிக்கூத்து என்பது தலைவியின் கருத்து; வீட்டின் ஒர் புறம் இரவில் வெறியாட்டு நடந்து கொண்டிருக்கவும், மறைந்து வந்த காதலனைத் தழுவி முயங்குகின்றாள். பசலை 3. ; : « » * : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/80&oldid=1238324" இலிருந்து மீள்விக்கப்பட்டது