பக்கம்:தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா மலா 1901-ம் ஆண்டு சென்னை மாநில அரசியல் மாநாடு மதுரையில் கூடிய காலத்து, அதற்கு வரவேற்புக் குழுத்தலைவராக இருந்த பாண்டித் துரைத் தேவரவர்கள் அம் மாநாட்டின் முடி விலே மதுரையில் சங்கம் நிறுவக் கருதியிருக்கும் தம் கருத்தினை வெளியிட்டனர். தேவரவர்க ளது முயற்சியை மாநாட்டிற்கு வந்திருந்த அறி ஞர்கள் அனைவரும் பாராட்டினர். தேவரவர்கள் தம் கருத்து நிறைவேறவேண் டிய முன் ஏற்பாடுகள் பலவற்றையும் செய்தார். 1901-ஆம் செப்டம்பர் திங்கள் 14-ஆம் நாளன் று மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி மண்ட பத்தில் தமிழ்நாட்டிலுள்ள தலைவர்களையும் தமிழ்ப்பெரும் புலவர்களையும் அழைத்துப் பேரவை ஒன்று கூட்டி இந்நான்காம் தமிழ்ச் சங்கத்தை இம்முயற்சிக்கு நிறுவினார். துணையாகப் பாஸ்கர். சேதுபதியவர்களும் வந் திருந்து சிறப்பித்து. சங்கம் நிலைபேறாக நடப்ப தற்குத் தம் சமஸ்தானத்தின் வழியாக என்றும் கிடைக்கும்படி பெரும்பொருள் உதவியுஞ் செய்தனர். இச்சங்கத்தின் அங்கங்களாகச் செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தக சாலை, நூல் ஆராய்ச்சித்துறை, அச்சகம் முதலியவை களும் அமைக்கப்பட்டன. கல்லூரித் தலைமை யாசிரியராக வடமொழி தென்மொழிப் புலமை நிரம்பிய திரு. நாராயண ஐயங்கார் நியமிக்கப் பெற்றார். திரு .ரா இராகவையங்கார் தமிழ்நூல் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும், சே. சுப்பிர மணியக் கவிராயர், சே. அருணாசலக் கவிராயர் சே. கந்தசாமிக் கவிராயர் இவர்கள் நாற்பரிசோ தகராகவும் நூல்திப்பாளராகவும் இருந்தனர். . கல்லூரியில் உடன் ஆசிரியர்களாக அரசஞ் சண்முகனார், சுந்தரேஸ்வர ஐயர், கோபாலையர் ஆகிய இவர்களும் இருந்து ஆசிரியப் பணிபுரிந் தனர். இப்போ துடதிரு. நா. அப்பனையங்கார் ஒருவரே ஆசிரியராக இருக்கின்றார். கல்லூரியில் பயிலும் மாணவர்க்கு, உண்டியம் உறையுளும் இலவசமாக அளிக்கப்பட்டன. கல்லூரித் தேர்வுகள்; பிரவேச, பால, பண் டிதம் என்று மூன்றாக வகுக்கப்பட்டுப் பாடத் திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் முதன்மையாக முதல்தரத்தில் தேர் வோர்க்குப் பொற்பதக்கம், பொற்கடகம், வெண்பொற்காசுகள் புதுக்கோட்டை மன் னர்ப் பரிசாக வழங்கப்பட்டன. சங்கச் செலவிற்குக் குறுநில மன்னர்களும் பெரு நிலக்கிழாரும் வணிகப் பெருக்காளரும் தாம் குறிப்பிட்ட தொகைகளை ஆண்டுதோறும் அனுப்பிவந்தனர். 23 1908-ம் ஆண்டு முதல் "செந்தமிழ்" என்னும் திங்கள் இதழ் இச்சங்கத்திலிருந்து வெளிவந்தது, இதற்கு ஆசிரியராக இருந்தவர்கள், முறையே ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், திரு ஐயங்கார். இப்போது இத்திங்கள் வெளியீட்டிற்கு ஆசிரியர் குழு ஒன்று புதிதாய் அமைக்கப்பெற்றுளது. நாராயண இச்சங்கத்திற்கு ஒரு செயற்குழு உண்டு. இதற்குத் தொடக்கம் முதல் பாண்டித்துரைத் தேவரவர்களே தலைவராக இருந்துவந்தனர். அவர்கள் காலஞ்சென்ற பின்னர் முத்துராமலிங்க சேதுபதி தலைவராக இருந்தார். களின் இப்போது முத்துராமலிங்க சேதுபதியவர் குமாரரான சண்முக ராஜேஸ்வர சேது பதியவர்கள் தலைவராகவும், தமிழவேன் . இராசன் அவர்கள் துணைத் தலைவராகவும் இருந்து வருகின்றனர். இச்சங்கம் தொடங்கிய நாள் முதலாக இச் சங்க வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பல ஆண்டுகள் அமைச்சராகவும், பிறகு துணைத் தலைவராகவும் இருந்து சங்கம் இதுகாறும் நிலைத் திருக்கும்படி அரும்பணி புரிந்தவர் அண்மையில் காலஞ்சென்ற வழக்கறிஞர், டி, சி. சீனிவாகை யங்காரவர்கள். இச்சங்கத்துக்கு அழைச்சராய் இருந்த வழக்கறிஞர் திரு. என். ஆர். கிருஷ்ண சாமி அய்யங்காரவர்களின் தமிழ்ப்பணியும், இப் போது சங்க. அமைச்சராகவுள்ள திரு. சண்முக சுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணியும் நிளைவு கூரத்தக்சுன, இச்சங்கம் தோன்றி அரை நூற்றாண்டுக்கு மேலாகின்றது. இப்பொழுது சங்கத் ன் பொன் விழா நடைபெறுகிறது. இக்காலத்தைத் தமி ழின் பொற்கால மெனலாம்; தமிழருக்கோர் நற்காலமெனலாம். இப்போது அயர்ந்திருக்கும் தமிழ்ச் சங்கம், இனி உயர்ந்து பல்வகைத் திருத் தங்கள் பெற்றுத் தமிழ்நாட்டின் பல்கலைக் கழக மாகவும் தமிழ் மக்களது சமுதாய வாழ்க் கையை வகுத்து ஆணைபிறப்பிக்கும் அறங்கூறும் அவையமாகவும் விளங்கி, என்றும் பொன்றாப் புகமுடன் நன்றாக இலங்குமென்று நாம் நம்பு வோமாக! இச்சங்கத்தின் பொன் விழா நடாத்தித் தமிழ் மக்கள் புத்துயிர் பெறுமாறு இவ்வரும் பெரும் செயலை ஆற்றுதற்கு முற்பட்ட தமிழவேள் திரு.பி.டி. இராசன் அவர்களையும், செந்தமிழ்ப் புரவலரான சேதுபதிகளின் வழித்தோன்றல் திரு. சண்முகராஜேஸ்வர சேதுபதியவர்களையும் மனமாரப் புகழ்ந்து பாராட்டி, அவர்கள் நாள் நிலைபெற்று இனிது வாழுமாறு இறை வன் திருவருளை வழுத்துவோமாக! நாம் நீடு