பக்கம்:தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சங்க வரலாறு

பேராசிரியர் திரு. ஆ. கார்மேகக்கோன், மதுரை

உலகப் படைப்பில் முதற்கண் தோன்றியது தமிழ்கம் என்பது அறிஞர் பலருடைய துணிபு. இந்நாட்டை ஆண்ட அரசர்கள் சேர, சோழ, பாண்டியராவார். இவர்களது தொன்மையை விளக்குங்கால் ஆசிரியர் பரிமேலழகர், "வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று", என்றும் குறள் உரையில், "தொன்று தொட்டு வருதல், சேர, சோழ, பாண்டியர் என்றாற் போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்" என்று கூறியுள்ளார். இங்ஙனம் அவர் கூறியது தொன்னூல்களின் வாயிலாக அவ்வாசிரி பர் தமிழ் நாடு, தமிழ் மக்கள் இவர்களது தொன்மையை நன்கு ஆராய்ந்து உண்மை முடிபினாலேயாம். ஆகவே தமிழ் மக் களது தொன்மை ஒரு கால வரம்பிற்கு உட் பட்டதன்று என்பது தெளிவாகும். கண்ட பண்டைத் தமிழ் நாட்டின் தெற்கெல்லை இப் போது கடற்குமரித் துறையிலிருந்து தெற்கே 3 பலகாத தூரம் பரவி இருந்தது. அப்பகுதி அக் காலத்தில் குமரிநாடு முதலாக நாற்பத்தொன் பது நாடுகளாகப் பிரிவுண்டிருந்தது. அப்பகுதி யில் தென்மதுரை யென்னும் நகரம் பாண்டியர் களது கோநகரமாகப் பன்னூறாண்டுகள் விளங்கி யிருந்தது. அந்நகரத்திலேயே தலைச்சங்கத்தைப் பாண்டியர்கள் நிறுவி நாட்டு மக்களுக்குக் கல்வி வளர்ச்சி புரிந்து வந்தார்கள். முதற் சங்கத்தை நிறுவியவன் காய்சின வழுதி என்னும் பாண்டி யன். இச்சங்கத்தில் அகத்தியனார், முரஞ்சியூர் முடிநாகராயர் முதலிய நூற்றுக்கணக்கான புல வர்கள் வீற்றிருந்து, தமிழ் ஆராய்ந்து எண்ணி றந்த நூல்களை இயற்றி வெளியிட்டனர். இத் தென்மதுரையில் இத்தலைச்சங்கம் பல்லாயிரம் ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் கடுங்கோன் என்னும் பாண்டியன். இவன், இத்தென் மதுரையைக் கடல் கொண்டமையின், பஃறுளியாறு, குமரி யாறு என்னும் இரண்டாற்றிற்கும் இடையே உள்ள வளநாட்டில் கபாடபுரம் என்னும் நகரை அமைத்து அதனைத் தலைநகரமாகக் கொண்டு