பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பழந்தமிழர் சமயம்

பழந்தமிழர் என்ற சொற்றொடர் நம் கண்ணி லும் காதிலும் பட்டவுடனே நமது நினைவு தொல் காப்பியம் சங்க இலக்கியங்கள் ஆகிய நூல்கள் எழுந்த காலத்துக்கு நம்மைக் கொண்டு செல்லுகிறது. அக்கால மக்களின் வாழ்க்கைக் கூறுகள் நம் மனக் கண்ணில் தோன்றுகின்றன. அவர்களின் சமய உணர்வு ஒழுக்கங்களை உணர்தற்கெனச் சில சொற்களும் சொற்றொடர்களும் சிறந்த சான்று. களாக அக்கால நூல்களில் நின்று நம் அறிவைப் பணி கொள்கின்றன. அந்நாளைய கல்வெட்டுக் களோ ஒவச் செய்திகளோ பிறவோ கிடைக்க வில்லை. நல்லிசைப் புலமைச் சான்றோர் சிலர் அவ்வக்காலத்தில் பாடிய பாட்டுக்கள் சிலவற்றைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப் பண்டையோர் வகுத்துள்ளனர். அவை பலவும் தேர்ந்து கொள்ளப் பட்ட சில சான்றோர்களின் சிலவும் பலவுமாகிய பாட்டுக்களாதலால் அவற்றைக் கொண்டு வரலாற்று