பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 இ. ஒளவை சு. துரைசாமி

பேராசிரியர் கூறுவது போலக் கண்டார். விரும்பும். தன்மை. இத்திருவுடன் ஒளியும் பெருகுவது பற்றி நீடும் திருவின்பயன், கண்ட நாவரசின் உள்ளத்தே அன்பு பெருகச் செய்தலால், அங்கே நிறையும் பெருகொளி துக்க மோகங்களைப் பயக்கும் இராசத் தமோகுண இருளைப் போக்கிச் சத்துவகுணத்தை விளங்கச் செய்வது தோன்ற “இன்புறுகுணம் முன்பெறவரும் நிலைகூட” என்று இயம்புகிறார். இசையும் தாளமும் மெய்ப்பாடும் ஒன்ற நிகழும் ஆடல் பொதுவாக இன்பம் தருவதாகலின், ஆடலரசாகிய சிவபரம் பொருள் அடி எடுத்தாடும் திருக்கூத்து அமுதம் பொழிதலால், “ஆடும் கழல்புரி அமுதத் திருநடம்” என அறிவுறுத்தப்படுகிறது.

ஆதிபந்தமில்லாத அருள்நடனமாதலின் அதன் இன்பத்தை இடையறவின்றிக் கண்டும் நாவுக்கரசர் ஆர்வம் தணியாமை புலப்பட “ஆராவகை தொழுது” ஆர்கின்றார் என்ற பாடுகின்றார். o -

இங்ஙனம் பாடி மகிழும் சேக்கிழார் நாவரசர் கூத்தப்பெருமானைக் கண்டு ஆர்வம் பெருக இன்புற்றதை நுணுகி நோக்கி அவருடைய அகமும் புறமுமாகிய கருவி கரணங்களின் செயல்வகை களைத் தனித்தனியாக எடுத்துரைப்பது நாமும் கண்டு இன்புறத் தக்கதாகும்.

- “கையும் 8 புனையஞ்சலியன

கண்ணும் பொழிமழை ஒழியாதே