பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 11

அடுத்த பாட்டில் வேண்டுகின்றனர். செய்தற்குரிய பணிவகை யறியாமல் மயங்குகின்றார். அதனால் “யாது நான் செய்வது” என்றும், அதனை அறிாயத தமது நிலைமைக்கு இரங்கி என்னே என்றும், நடம்புரியும் இறைவன் திருவடியைக் காண்கின்றார். சிறிது நிற்பினும் கால்வலி காணும் தம்மைப் போல இறைவன் திருவடி இரவும் பகலும் இடையறாது ஆடல்புரிவதால் வருத்துமே என ஐயுற்று, “தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட அடியினை அலசுங் கொல்லோ” என வருந்துகிறார். -

இறைவன் ஆடும் சிற்றம்பலத்தை அடைந்தவர், “இறைவ, உலகவர் ஏத்த நீ ஆடுமாற்றைக் கண்ட வாறே திரிந்து நாளும் நின் திருப்பாதம் கருத்திற் கொண்டிருந்து நின் அருட்குறிப்பின்வழி நின்று ஆடிப்பாடிக் கூடுவேன் என்று கண்டவா.ஆடுமாறே” என்று பாடுகின்றார். எண்டிசையோரும் கண்டு ஒத்த ஆடும் முறையைக் கண்டதனால், அங்ஙனமே அதனை எங்கும் காணத்திரியுமாறு தோன்றக் “கண்டவாதிரிந்து” என்றும், ஆடும் நிறம் கண்ட வாறே கண்ட அப்பொழுதே கரணம் திரிந்து கருத்திடை நின்னைக் கொள்வேனாயினேன் என்றும் குறித்தவாறு. -

பார்த்திருந்து.வந்தவாறே. - இதன்கண், சிற்றம் பலத்துக் கூத்தா நான் கூடவந்தவாறு உன் கூத்துக் காண்பான் வந்தேன்; அதனால், நான் பார்த்திருந்து பரவுவன்; பாடியும்