பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இ ஒளவை சு. துரைசாமி

ஆடியும் உன்னை மூர்த்தியே என்பன்; மூவரில் முதல்வன் என்பன்; நீயும் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்; இனி ஒரு குறையும் இல்லை என்றும் இயம்புகிறார். - -

பொய்யினை.வந்தவாறே

பரம, அம்பலத்தே நின் ஆடல் காண்பான் நான் வந்தவாறு இது; வந்துகாண்டலால், யான் பொய்தவிர்த்து அகத்தடிமை செய்ய நீ அருளல் வேண்டும்; ஆதிமுதலும், ஆதிமூர்த்தியும் நீயாதலால் உனக்கு இது அருமையன்று; பொய் தவிர்த்தலான்றி மெய்யடிமை யாதல் நில்லாமை பற்றிப் பொய் யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய அருளிச் செய் என்றார். புறமலா அடிமை, அகத்

தடிமை, மெய்யடிமை.

மனத்தினால்.வந்தவாறே

மனத்தே திகைப்புண்டு நாடோறும் மாண்பலா நெறியிற் சென்று மக்கள் இடர்ப்பட்டு ஓலமிடு கின்றனர்; அதுகண்டு கலங்குகின்ற நான் வேறு செயல்வகை அறியேன்; அதனால் நின் இலயம் காண்பான் வந்தேன் என்று. இப்பாட்டிற் கூறு கின்றார். . .

நெஞ்சினை.ஆடுமாறே.

என் நெஞ்சைத் துயதாக்கி நன்னினைவுகளை நினைப்பிக்காமல், வேற்று நினைவுகளால் வேதனைய்ை நான் எய்தச் செய்கின்றாயாதலால்,