பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 113

அதனின் நீங்கற்கு அஞ்சொலாள் காண அம்பலத்தே நீ ஆடும் ஆடல் காண்பான் வந்தேன். நினது அருட்கூத்து என் நெஞ்சினை நேர்ப்படுத்தும் என்று இப்பாட்டில் கூறுகின்றார்.

மண்ணுண்ட-ஆடுமாறே மண்ணுண்டமாலும் மலர் இருந்த அயனும் விண்ணுண்ட திருவே விரும்பி முயன்றமையின் நின் உருவம் காணமாட்டாராயினர்; திருமிக்க அம்பலத் தின் பண்ணுண்டபாடலோடு நீ ஆடும் திறம் காணின் அவர் விரும்பிய அடிமுடியும் காணலாம் என்று இப்பாட்டில் கூறுகின்றார்.

இவ்வண்ணம் பாடிப் பரவிய நாவுக்கரசர். திருவம் பலத்தின் முற்றத்திலும் பக்கங்களிலும் உழவாரப்பணி செய்து பின் திருவீதியிலும் அதனைச் செய்து மகிழ்வாராயினர். இத் திருப்பணியால் தமக்குத் திருவருளின்பம் எய்துதலால் பெருமகிழ்ச்சி கொள்வது நாவரசரின் நல்லுள்ளம்.

இந்நிலையில் சிற்றம்பலம் அடியார்க்கு வேண்டும் உணவும் உடையும் உறையுளும் தந்து வாழ்விக்கும் சிறப்புடைமை கண்டு வியக்கின்றார். உழவாரப் பணி மேன்மேலும் உலகையே மிகுவிக் கின்றது; கண்ணிர் வெண்ணிற்றைக் கரைத்துக் கொண்டு ஒழுகுகிறது. ‘பெருந்திருத் தொண்டு செய்து விருப்புறு மேனி கண்ணிர் வெண்ணிற்று வண்டலாட” மகிழ்கின்றார் எனச் சேக்கிழார்

உரைக்கின்றார்.

த.செ.-8