பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஆ ஒளவை சு. துரைசாமி

இவ்வாறு பன்னாள் கழிகின்றது. இந்நாளில் “அன்னம் பாலிக்கும்” என்று திருக்குறுந் தொகையைப் பாடினார்.

1. அன்னம்.பிறவியே

இப்பாட்டில் சிற்றம்பலம் அன்னமும் பொன் னும் பூமிசை பெருக நல்கும்; இதன் காட்சி அன்பு பெருகுவித்தலால், இடையறாது கண்ட இன்புறுதற்கு இப்பிறவி இன்னமும் கிடைக்குமோ.

தில்லை அன்னமும் சிற்றம்பலம் பொன்னும் பாலிக்கும்; அம்பலக் காட்சி அன்பு பெருகுவிக்கும்; இவற்றைப் பெற்று இன்புறும் பிறவி இன்னும் கிடைக்குமா? என்று கூறுகின்றார்.

2. அரும்பற்றப்பட.எம்பிரானையே

இப்பாட்டில், அரும்புகள் விலக்கப்பட நின்ற மலர்கள் கொண்டு, சுரும்பு தாதுண்ட பூக்களை விலக்கிக் காமனைக் காய்ந்தவனான எம்பிரானைத் தூவி வழிபடுவீராக என்று நமக்கு அறிவுறுத்து கின்றார்.

அம்பலம் இருக்கும் கோயில் பெரும் பற்றப் புலியூர், அது புலியூர் என்றும் வழங்கும். - **,

3. அரிச்சுற்ற...உய்ம்மிளே.

இதன் கண் வினையால் அரிப்புண்டு வருந்தும் நீர் எரியிடைப் படுமாறு இறந்துவிட்டனரென்று பலரும் சிரித்து ஒழிக்கா முன் திருச்சிற்றம்பலம் சென்றடைக என்று இயம்புகின்றார்.