பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


120 ஒளவை சு. துரைசாமி

என்றும் கூறுகின்றேர். பொன்னில் வேய்ந்த அம்பல மாதலின் செம்பொன்னின் அம்பலம் என்று குறிக்கப் படுகிறது.

7. மைகொள்.உய்வனோ

மை, கருமை. பை, படம். செம்பொன் நிறைந் திருத்தலின் திருமகட்கு இடமாதல் தோன்றச் செய்ய மாதுறை சிற்றம்பலம் என்றும், தலைமை பற்றி ஐயன் என்றும் குறிக்கின்றார்.

8. முழுதும்.உய்வனோ

இதன்கண், முன்பெல்லாம் செம்பொன் எனப் பொதுப்படக் கூறினாராகலின், அதன் தனிச் சிறப்புணர்த்த ஈண்டுத் துரய செம்பொன் என்றும், முன்னரே எழுதித் திட்டமிட்டு மேய்ந்தது என்றற்கு எழுதி மேய்ந்த சிற்றம்பலம் என்றும் கூறுகின்றார்.

9. காருலாம்.உய்வனோ

கொன்றை கார்காலத்து மலர்வது பற்றிக் காருலாம் மலர்க் கொன்றை என்கிறார். தேரோடும் திருவீதியையுடைய தில்லையைத் தேருலாவிய தில்லை என்கிறார். வாயால் உண்ணப்படாது உணர்வால் சுவைக்கப்படுதலின் ஆர்கிலா அமுது என்றார்.

10. ஒங்கும்.உய்வனோ

இங்கே, தொண்டல்லது வேறு துணை யில்லாமை பற்றிப் பாங்கிலாத் தொண்டனேன் என்றார்.