பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஒளவை சு. துரைசாமி

“அந்தணர்தம் சிந்தை யானை” என்றும், அவர்தம் அகத்துறையும் மறைநூற்பொருளில் உள்ளீடாக இருத்தலால் அருமறையின் அகத்தானை என்றும், அகத்தேயும் அணுவுக்கணுவாய் எழுந்தருளுதலால் அணுவை என்றும் கூறுகின்றார். தத்துவப் புலவர் பலரும் சிவதத்துவத்துக்கு அப்பாற் சென்றில ராகலின், அதற்கப்பாலாய் உள்ள பரசிவநிலையை எண்ணி “யார்க்கும் தெரியாத தத்துவளை” என்றார். தத்துவம் கடந்து நோக்கும் யோகக் காட்சியில் காண்பார்க்குத் தேனும் பாலுமாய் இனிமை செய்தலின் தேனைப் பாலை என்றும், அவ்விடத்தும் ஒளி வடிவிற்றோன்றுதலின் திகழ் ஒளியை என்றும் ஒதுகின்றார்.

இதுகாறும் அகக்காட்சி கூறிய நாவுக்கரசர், புறக்காட்சிக்கு ஐம்பெரும் பூதமாயும் அவற்றை இயக்கும் திருமால் முதலிய தேவர்களாயும் அவர் கட்குப் பெரிய தலைவனாயும் இருத்தலால் பெரி யானை என்றும், இப்பெற்றியுடைய பெருமானைப் பிறந்தநாள் முற்றும் பேசிப் பேசிக் கழிக்க வேண்டியிருத்தலால் பேசாத நாளெல்லாம் பிறவா நாள் என்றும் பேசுகின்றார்.

2. கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்

காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை அற்றார்க்கு மலந்தார்க்கு மருள்செய் வானை யாரூரும் புகுவானை யறிந்தோ மன்றே மற்றாருந்தன்னொப்பா ரில்லா தானை

வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்