பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ: 123

பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன்கண் கற்றோர்க்கு வரம்பாய் அறிவின்பம் நல்கிக் கல்லார் நெஞ்சில் நில்லாமையின், சிவனைக் கற்றானை என்றார். பேரருளாளனாதலின் அற்றார்க் கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை என்றும், தனிமுதலாதல் விளங்க மற்றோரும் தன்னொப்பார் இல்லாதானை என்றும், செய்வினையின்றி வினைப் போகமே நுகரும் இயல்பால் வானவர் மறுத்தற்குரிய ராயினும், அவர்தாமும் மறவாது தாமும் வணங்கி வழிபடப் பெறுதலின் வானவர்கள் எப்பொழுதம் வணங்கியேத்தப் பெற்றானை என்றும் கூறினார்.

கருமானி னுரியதளே. யுடையா வீக்கிக்

கனைகழல்கள் கலந்தொலிப்ப வனல்கை யேந்தி வருமானத் திரடோள்கண் மட்டித் தாட

வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி அருமான வாண் முகத்தா ளமர்ந்து காண

வமரர்கணம் முடிவனங்க வாடுஇன்ற பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன்கண் மான்தோல் உடையாக, காலில் கனைகழல் ஒலிப்ப, உமையவள் அமர்ந்து காண அமரர் வணங்க இறைவன் அம்பலத்தே ஆடும் நலம் சிறப்பிக்கப்படுகிறது. மட்டித்தல், மடங்குதல்.