பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ: 125

அடியார்தம் அருந்துணை; என முன்னும் கட்டுக. அடியார்க்கு அறிவருளி நெறிகாட்டி உய்க்கும் செயலால் சிவனை அருந்துணையென்றார். அல்லல் பிறவி நோயுமாம். -

ஞானமாய மருந்தருளிப் பிறவி நோயை நீக்குதலால் அருமருந்தென்றார். சுற்றத் தொடர் பறுத்து இருவகைப் பற்றம் அற்று, புலன்களை அடக்கி, பெண் போகத்தை மாற்றிப் பொது நீக்கிடும் இறைவனது நிலை எல்லோர்க்கும் பெருந்துணை புரிவது இதன்கண் கூறப்படுகிறது.

கரும்பமரு மொழிமடவாள் பங்கன் றன்னைக்

கனவயிரக் குன்றனைய காட்சி யானை அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை

யருமறையோ டாறங்க மாயி னானைச் கரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்

சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன்கண் வானம் மண் முதலிய துளங்கினும் துளங்காவியல்பினதாதலின் துளக்கில்லா விளக் கென்றார். -

வரும்பயனை யெழுநரம்பி னோசை யானை

வரைசிலையா வானவர்கண் முயன்ற வாளி.

அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த

வம்மானை யலைகடனஞ் சயின்றான் றன்னைச்