பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 127

குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்

கூத்தாட வல்லானைக் கோனை ஞானம் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நானே. இதன் கண், மூவுலகும் அவனே என்றும், அவ்வாறு தன்னைப் பிறர் ஆக்காது தானே ஆயதன்மை விளங்க மூவுலகம் தானாய முதல்வன் என்றும் கூறுகின்றார். முருகனிடம் ஞானம் பெற்ற குறிப்புத் தோன்ற ஞானம் பெற்றானை என்கிறார் போலும்.

காரொனிய திருமேனிச் செங்கண் மாலுங்

கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணஞ் சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்

திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொளியை யிருநிலனும் விசும்பும் விண்ணு

மேழுலுகுங் கடந்தண்டத் தப்பா னின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

நிறம் கார்முகில்போற் கரிதாயினும் ஒளி யுடைமை பற்றிக் காரொளிய திருமேனிச் செங்கண் மால் என்றார். செங்கண், இயல்பாகவே சிவந் திருப்பது என்பர் பரிமேலழகர், சிந்திப்பவர்க்குச் சிந்தனைக்கண் தோன்றும் மயக்கங்களை ஞானத் தால் தெளிவித்து ஒளிபெறுவிப்பது பற்றிச் சிவனைச் சிந்தை தனை மயக்கம் தீர்க்கும் ஏரொளி என்றார்.