பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

தில்லையில் சுந்தரர்

திருவெண்ணெய்நல்லூரில் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட பின் நம்பி ஆரூரர் சுற்றத் தொடர்பு அகன்று, திருத்துறையூர் திருவதிகை முதலிய பதிகளில் இறைவனைப் பாடிப் பரவிக் கொண்டு தில்லைப்பதியின் எல்லையை அணுகி னார். அப்பொழுது அவர் செவியில் தில்லை நகரில் எழும் பல்வேறு ஒலிகள் கேட்டன. அவற்றை யாழொலி, முழவொலி, வேதவொலி, கீதவொலி எனப் பிரித்துணர்ந்து உரைக்கும் சேக்கிழார், “நரம்புடையா ழொலிமுழவின் நாதவொலி வேத வொலி, அரம்பையர்தம் கீத ஒலி அறாத்தில்லை” என்று தெரிவிக்கின்றார். தில்லைப்பதியின் எல்லையை “மல்லலம் பதியின் எல்லை” என்று சேக்கிழார் சிறப்பிக்கின்றார். மல்லல், வளமை.

தில்லை மருத நிலத்துராதலின், சுற்றிலுமுள்ள வயல்கள் நீர் நிறைந்துள்ளன; அதன்கண் கயல் மீன்கள் வாழ்கின்றன; அவற்றைப் புள்ளினங்கள் மேய்வான் இருப்பனவற்றால் நீர் அலம்பித்

த.செ.-9