பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 இ. ஒளவை சு. துரைசாமி

திரையெழுப்புகிறது. அதனிடையே வாள்ை மீன்கள் துள்ளிப் பாய்கின்றன; மலங்குகள் வேறு மல் இ யுள்ளன.

மலங்குகளை நினைவார்க்கு உயிர்களைப் பற்றி வருத்தும் மலங்கள் நினைவிலெழுதலின், அவற்றை அறக்கெடுக்கும் நலம் தில்லையம்பதிக்கு உண்டு என்று தெளிவுறுத்தற்குத் “தொழுவார்கள் தம் மும்மை மாமலங்கள் அறவீடருள் தில்லை” என்று கூறுகின்றார்.

நிற்க, தில்லை எல்லைக்குட் புக்க ஆரூரர், எதிரே தோன்று நந்தன வனங்களைக் காணுகின்றார். கருத்தில் மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வனத்தில் வன்னி, கொன்றை, வாழை, சண்பகம் ஆரம் (சந்தனம்) பலாசம், செருந்தி, மந்தாரம், கன்னி காரம் (கோங்கு புன்னை முதலிய மரங்கள் நின்று மலர்ந்து அழகு செய்கின்றன. அவை தில்லைப் பெருமானுக்கு மலர் வழங்கி மாண்புறுதலால் அவற்றையும் ஆரூரர் பணிந்து செல்கிறார். மணம் கமழும் மலர்மாலை பால் மாவிருப்புடையாரதலால், கற்பு, முல்லை, கூவிளம், வில்வம், மாலதி, மல்லிகை, கரவீரம், அலரி முதலிய அம்பலர்க்கு மணமலர் வழங்கும் மரங்கட்கு வணக்கம் செய்கின்றார் என்பது தோன்ற மணம் கமழ்தாரான் என்று ஆரூரரைக் குறிக்கின்றார்.

நந்தவனத்தை அடுத்து நகரைச் சூழ்ந்து

கிடக்கும் அகழி காட்சி தருகிறது. அது பெருங்கடல் போந்து வலங் கொள்வது போலவுளது. கடல் வளம்