பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 133

பின்பு நம்பி ஆரூரர் வாயிலின் அகத்தே அகன்று கிடக்கும் திருவீதி (பிராகாரம்) புகுந்தார். அங்கே எம்மருங்கும் முழக்கமே பெருத்திருந்தது; அவை மறையொளியும், வானதுந்து பி முதலிய முழக்கொலியும், பூமாலைகளில் மொய்க்கும் வண்டொலியும், தொண்டர் போற்றிசைக்கும் ஒலியும் எனப் பலவாம். வானத்து இந்திரன் உறையும் பொன்கோயில் போலும் மாளிகைகள் வானளாவி நிற்க, அவற்றின் உச்சியில் கட்டப்பட்ட கொடிகள் ஒலிக்கின்றன. யோக சிந்தையரான வேதியர்கள் வளர்க்கும் ஒமப்புகை சென்று வானத்தில் படிந்த கருமுகில் போல் பரவுகின்றன; அவற்றிடையே தோன்றும் மாளிகைக் கொடிகள் மின்னல் அடங்குவன போல விளங்குகின்றன. “மாளிகைக் கொடிகள்.......விளங்கும்” என்று சேக்கிழார் கூறுகின்றார்.

மாளிகையின் மேலிடத்தேயுள்ள நாசிகளில் தோகை மயில்கள் நிற்கின்றன; ஆகுதி செய்யும் வேள்விச் சாலைகளில் அரசிக்கட்டையின் தீச்சுடர் எழுகிறது; வாயில்கள் தோறும் மணித்தாமங்கள் தொங்ககின்றன; மேடைகளில் எல்லாம் கலசங்கள் இருந்து காட்சிதருகின்றன; நேர் வரிசைகளில் செவ்விய ஒளி தோன்றுகிறது; சாலைகள் தோறு செந்நெல்குவை மலைபோல் நிற்கின்றன; பந்தர் தோறும் தண்ணிய புனல் தரப்படுகிறது; நெடிய இடைவெளிகளில் தேவர்களும் சிறந்து திகழ் கின்றனர்.