பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் த் 135

உடற்கண் கண் அமைந்த கண் காது முதலிய பொறிவழியியங்கும் அறிவு ஏனையவற்றை விடுத்து நீங்கிக் கண் ஒன்றே இடமாக நிற்கிறது; அதற்கு உடலாக இருக்கும் அந்தக் கரணங்களில் மனம் அலங்காரம் புத்தி முதலியன தம்மில் கரைந்து சித்தம் ஒன்றேயாய்க் கண்வழி இயங்கும் ஆன்ம அறிவாற் காணப்பட்ட கூத்தப்பிரான் திருவுருவைச் சித்தம் சிந்திப்பதில் தோய்ந்து நிற்கிறது. கரணங்களின் இயக்கம் சத்துவம் முதலிய குணநிலைக்கேற்பத் தெளிவும் கலக்கமும் மயக்கமும் பெறுதலால், சிந்தனையில் தெளிவு நிலவுமாறு, தாமசம் இராசதம் என்ற இரண்டின் இயக்கத்தை ஒடுக்கிச் சத்துவ மொன்றே நிலைபெறுகிறது. ஆகவே, சத்துவ விளக்கத்தில் தெளிந்த சிந்தனை வழியாக ஆன்ம அறிவு கண் வழிப்புறத்தே சென்று அம்பலத்தாடியின் அருமைத் திருவுருவைப் பற்றியதும், பேரின்பம் அவ்வறிவின் கண் ஊறிப் பெருகுகிறது; இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கின்றார் ஆரூரர், இதனைச் சேக்கிழாரடிகள், “ஐந்து பேரறிவும். மலர்ந்தார்” என்று எடுத்துரைக்கின்றார்.

கண் காது முதலிய அறிகருவிகள் ஐந்தாகலின் அவற்றின் வழியாக அருவமும் உருவமுமாகிய உலகம் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியப் படுதலால் “ஐந்து பேரறிவு” என்றும், அப்பேரறிவு கண்ணிடமே ஒன்றி நிற்குமாறு விளக்க, கண்களே கொள்ள என்றும் கூறுகின்றார். -