பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இ ஒளவை சு. துரைசாமி

வாலிதாம் இன்பமாம் என்று” கண்களில் நீர் சொரியக் கைகள் தலைமேற்குவிய, வாய் இனிய பண் கலந்து பாடப் பரவினர்; பின்பு மெய்யாற் பணிந்தார். திருநடம் கும்பிடும் பேறு எய்தியதால் மண்ணில் கிடைத்த பிறவி தனக்குத் துளயதும் இன்பமுமாம் என்கிறார். மண்ணில் பிறவி தூயதன்று என்னும் கொள்கைபற்றி.

பணிந்து எழுந்தக்கால், ‘ஆரூரில் நம் பால்வருக” என்றொரு சொல் வானில் பிறந்தது. கேட்டதும் ஆரூரர் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டு இறைவனைத் தொழுது அம்பலத்தை வலங்கொண்டு வெளிப் போந்து எழுநிலை கோபுரம் கடந்தார். அக்கோபுரம், வானுலகம் பணிய உயர்ந்த பொன்மலை போலக் காட்சியளித்தது. மேனி நிலத்திற் படிய விழுந்து வணங்கினவர் திருவீதியைப் பணிந்து தெற்குத் திருவாயில் வழியாகச் சென்று தில்லையின் எல்லையை இறைஞ்சிக் கொள்ளிட நதிக்கரை அடைந்தார்.

நாடெங்குமுள்ள சிவன் கோயில்கட்குச் சென்று வழிபாடாற்றிவரும் நம்பியாரூரர், திருமுது குன்றத்தே இறைவன் தந்து பொன்பெற்று அத் திருவாரூர்க் குளத்திற்பெறுவேன் என முதுகுன்றத் தருகிலோடும் மணிமுத்தாற்றிற் பெய்துவிட்டுத் தில்லை நோக்கி வருவாராயினர். வழியில் கடம்பூர் பரவிக் கொண்டு தில்லையை அடைந்த ஆரூரர், திரு வீதியைத் தாழ்ந்து வணங்கிப் “புள்ளிய வினைவாய்