பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 13

தொடர்பாய்க் கடவுளை உலகைத் தனக்குரியதாகக் கொண்ட உடையவனாகவும், உலகம் அவனது உடைமையாகவும் நிறுத்துகிறது. உயிர்கள் உலகிடைத் தோன்றும் உடம்பை இடமாகக் கொண்டு வினை (தொழில்) செய்து பயன்பெறுவதால் இவ்வுலகம் உயிர்களின் பொருட்டே படைக்கப்பட்டு அவற்றிற்கு உதவப்பட்டிருப்பது என்பது பழந்தமிழர் சமயக் கொள்கை. இதனால் கடவுட் பொருட்கும் உயிர் கட்கும் உள்ள தொடர்பு உதவி செய்வோனுக்கும் உதவி செய்யப்பட்டோர்க்கும் உள்ள தொடர்பாய், உதவி பெற்றோன் உதவி செய்தோனுக்குக் கடமைப் பட்டு அவன் நன்றியினை நினைந்தொழுகுவது போல உயிர்கள் கடவுளது அருளை நினைந்து வழிபட்டொழுகுவது கடனாகும் என்பதை வற்புறுத்துகிறது. இதனால்தான் தொல்காப்பியனார் கடவுள் வாழ்த்துப் பகுதிக்குச் சிறப்பாக இலக்கணம் வகுத்துக் காட்டியுள்ளார்.

உயிர் வகையுள் மக்களைத் தனிப்பட நிறுத்தி உயர் திணை உயிர் என்றும், ஏனை உயிர் வகையை அஃறிணையுயிர் எனவும் பழந்தமிழர் கொண்டனர். “உயர்தினை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்பது தொல் காப்பியம். மக்களினத்துள் அடங்காமல், கடவுளாகிய முதற் பொருளுமாகாமல் இரண்டற்கும் இடைப் பட்ட நிலையில் தெய்வங்கள் காணப்படுகின்றன. இவை மக்களுயிர் போல மனவுணர்வும் வினை