பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ. 139

ஓங்கும்” திருவாயிலை நண்ணி அதன் முன்னர்த் தமது திருமார்பு பொருந்த மண்மேல் வீழ்ந்து வணங்கினார். வணங்கி எழுந்தவர், திருமாளிகைப் பத்தியைச் சுற்றி வந்து, கையாற் தொழுது கும்பிட்டு, சிற்றம்பலத்தின் முன்னிற்கும் கோபுரத்தின் ஊடே சென்று பொன்னம்பலத்தை அடைந்தார். உள்ளத்தே ஊறிய இன்பம் பெருக்கெடுத் தொளிர, கண்களில் நீர் சொரிய நின்றார். * ,

அன்பு மேலும் மேலும் பெருகுதலால் வாய் குளறி நிலத்தில் படிய வீழ்ந்து பணிந்து, இறைவன் திருக்கூத்தின் கண் உள்ள விருப்பத்தால் திண்மை யெய்தவே வஞ்சமிலாரைக் கண்டவிடத்து எய்துவது போலும் மனநிறைவு கொண்டார். அன்பால் பரவும் உள்ளத்துக்கு உரம் மிகுவிப்பது பற்றி இறைவன் திருக்கூத்தை, “வேட்கை உரனுறுதி திருக்கூத்து” என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார்.

இங்ஙனம் மனநிறைவெய்தியதும் நம்பி ஆரூர் அம்பலத்தானைப் பாடத் தொடங்கியதும். பேரூரில் அவனைக் கண்ட நிலை நினைவெய்தவும் அந்நினை வோடே பாடுவாராயினர்.

1. புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றமாகலின், தருமன் தமர் செக்கிலிடும் போது தடுத்தாட் கொள்வான். . . .”

மடித்தாடும் அடிமைக்கண் அன்றி-மேன் மேலும் ஆசைகளில் வீழ்ந்து ஐம்புலங்கட்கு அடிமை யாய் வருந்துவதின்றி வாழ்நாள் முழுதும் தருமனார்