பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஒளவை சு. துரைசாமி

தமர் கைப்பட்டுத் துன்புறாமல் தடுத்தாட் கொள் வான்.

2. காமத்தில் பேராது சென்றாற் போலன்றிட விரும்பிய போகப் பொருளில் மீளாது சென்று வீழ்ந்தாற் போலன்றி-போலாது)

இடையறாநினைவால் அன்பராய்ச் சென்று அடிவீழும் திருவினாரை நமன்தமர் ஒராது செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்.

3. நரியார்தம் கள்ளத்தால் பக்கான பரிசு ஒழிந்து-நரியின் கள்ளத்தால் ஒன்றியிருந்த எருதுகள் பிரிந்து தனித்து மடியுந்தன்மை நீங்கி, திரியாத அன்பராய்ச் சென்று அடிவீழும். சிந்தையான நமன்தமர் வருத்தும் போது தடுத்தாட் கொள்வான்.

4. நமன்தமர் நம்மைக் கட்டியகட்டு அறுப்பிப் பான்; அருமையான தனது சிவலோகத்தைத் தருவான்; ஆதலால் சிற்றம்பலத்துப் பெருமானை நமக்கு உரியனாகப் பெற்றாம்.

பல்லவர்க்குத் திறைகொடாமன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் வாழும் புலியூர்ச் சிற்றம்பலம் என்க.

5. கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம் தருவான்; நமன்தமர் செக்கிலிடும் போது தடுத்தாட் கொள்வான்; ஆகையால் பெருமானைப் பெற்றாம்.