பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 143

அவ்வாறு பொறிபுலன்களால் அளந்தறியப்படாமை பற்றி, ‘பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம்” என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார்.

இந்த இன்பப் பெருக்கம், கூத்தப் பெருமான் புரியும் ஆனந்தக் கூத்திடைத் தோன்றுதலால், அதனைக் காணும் பேறு ஆரூரர்க்கு அரிதிற் கிடைத் தமை விளங்க ‘தாண்டவம் புரியும் தம்பிரானாரைத் தலைப்படக் கிடைத்தலின்” என்றார். - அக்காலையில் ஆரூரர் சிவனடியார்க்குரிய கோலமே பூண்டிருந்தாராகலின் அவரைச் “சைவ ஆண்டகை” என்றார்.

இங்ஙனம், இறைவனது அருட்கூத்தைக் கண்டு இன்பவெள்ளத்தில் மூழ்கிய ஆரூரர் எய்திய உவகைகையைத் தமது புலமையாற் காணலுற்ற சேக்கிழார் அது மனமொழிகளின் எல்லைகடந்து நிற்கும் பெருமையை வியந்து, “அந்நிலைமை விளைவையார் அளவற்றிதுரைப்பார்” என்று ஆர்வம் பெருகியுரைக்கின்றார். அந்நிலையில் ஆரூரர், வாய்மலர்ந்து,