பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ. 145

வைதிக சமயங்களாகிய சைவ வைணவங்களே யன்றிச் சயின புத்த சமயங்களும் தழைத்து ஓங்கிய போது, வடபுலம் தென்புலம் என்ற வேற்றுமை யின்றிச் சமயவுண்மைகள் நமது பாரதநாடு முழுதும் பரவி நின்றன. எண்ணிறந்த சமய நோக்குடைய புராணங்கள் பெருகின. விண்ணுலகும் மண்ணுலகும் புராணவுலகில் சமவாழ்வு நடத்தின. விண்ணவர் மண்ணவரோடும் மண்ணவர் விண்ணவரோடும் தம்மிற் கலந்து உறவாடினர். முனிவர்களும் தேவர் களும் விஞ்சையர்களும் எனப் பலவேறு இனத்தவர் பாரத நாட்டுப் பண்பமைந்த மக்களாகக் கலந்து வாழ்ந்தனர். புராணங்கள் நாட்டிய பெளராணிக சமயவாழ்வில், சிவன் திருமால் பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள், தேவ லோகத்தவராயினும் நமது பாரதநாட்டில் ஆங்காங்கு இடம் கொண்டு வாழ்ந்தனர். சிவன்கயிலையிலும், திருமால் கடலிலும் பிரமன் தாமரைப் பூவிலும், இந்திரன் கிழக்கிலும் இருந்தனர். சிறப்புடைய நகரங்களில் சிவன் முதலிய கடவுளரைத் திருமால் முதலிய தேவர்கள் தவம் கிடந்து வழிபட்டு வரம் பெற்ற வரலாறுகளைத் தலபுராணங்கள் விரிவாகப் பேசுகின்றன. அயைாவும் வடமொழிப் புராணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. வேண்டுவோர் அவற்றைத் தங்கள் தங்கள் மொழியில் பெயர்த்து எழுதிக் கொண்டனர். பெருங்காடு களிலும் மலைகளிலும் பெரிய பெரிய ஆற்றல் வாய்ந்த முனிவர்கள் வாழ்ந்தனர். அவர்களும்

த.செ.-10