பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இ ஒளவை சு. துரைசாமி

தேவர்களைப் போலச் சிவன் முதலிய தேவதேவர்கள் வாழிடங்களுக்கு வந்து அவர்களை வழிபட்டுச் செல்வர். நாடாளும் வேந்தர்களும் தேவதேவர் களோடு முனிவர்களையும் இருடிகளையும் முறை யாக வழிபட்டு வரம் பெற்றுச் சென்றனர். -

இங்ஙன்ம் தேவ தேவர்களையும் முனிவர் களையும் பிறஞானச் செல்வர்களையும் அவர்கள் உறையும் இடங்கட்குச் சென்று வழிபட்டு வருவ தென்பது உயரிய கடமையாக உருவாயிற்று. சமய வொழுக்கம் உரைக்கும் நூல்கள், இதனைச் “சரியாசாரம்” என்று வகுத்து உரைப்பனவாயின. வைதிக சமயத்தனர்க்கே யன்றிப் பவுத்த சயின சமயத்தவரும் இந்தச் சரியாசாரத்தை மேற் கொண்டனர். அவர்களிடையே போதிசத்துவர் இருந்த கயையும், வர்த்தமான வீரருக்குரிய பாடலியும் மேன்மையுற்றன. இவ்வாறே சைவரும் வைணவரும் சிறப்புடையதலங்கள் பலவற்றிற்குச் சென்று தேவதேவனாகிய சிவனையும் திருமாலையும் வழிபடும் சமயவொழுக்கத்தைக் கைக்கொண்டனர்.

இதனை இவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் கற்றுக் கொண்டனர் என்பதற்கில்லை. ஒருவர்க் கொருவர் முன்பின் என்று சொல்ல முடியாதவாறு சமய புராண்வரலாறுகள் பின்னிப் பிணங்கிக் கிடக்கின்றன. அகத்தியர் தென்னாடு வந்ததும் தருமபாலன் நாலந்தா சென்றதும், குமரிலபட்டர் வடநாடு புகுந்ததும், திருமூலர் தென் தமிழ்நாடு