பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஆ. ஒளவை சு. துரைசாமி

கயிலைகாணச் செல்வார்க்கு இக்காலத்துள்ள வாய்ப்புக்களும் உடை உணவுவகைகளும் 1300 ஆண்டுகட்கு முன் இல்லை. ஆயினும் நாவுக்கரசர், கயிலை காணும் காதலே ஊக்கமும் உறுதியும் வாய்ப்புமாகக் கொண்டு கயிலை நோக்கிச் செல்லலானார். காதலும் ஊக்கமும் பிறவும் கருத் தளவில் துணைசெய்தன; அவற்றை உள்ளே தாங்கிச் செல்லும் நாவரசரின் முதுமை சான்ற நல்லுடல் செலவு ஆற்றும் வலியுடையதாக இல்லை. அதுவும் தேய்ந்து கெட்டது.

“மார்பமும் தசை நைந்து ந்தி

வரிந்த என்பு முரிந்திட நேர்வரும் குறிநின்ற சிந்தையின்

நேசம் ஈனைநேடும் நீடு ஆர்வம் அங்கு உயிர்கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன்கெடச் சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு

சென்றனர் செம்மையோர்” என்று சேக்கிழார் நமக்கு அறிவிக்கின்றார்.

இங்கே தருமயாதீனத் தலைவர் கயிலைக்கு முனிவர்கள் திருப்பனந்தாள் தம்பிரான் சுவாமி களுடன் கயிலைக்குச் சென்று அதனடியில் நின்று எழுந்த நிழற்படம் மனக்கண்ணில் காட்சி தருகிறது. எங்கும் பனிபரந்து தண்ணென் காற்று வீச, அச்சூழ்நிலைக்கமைந்த உடையுடுத்து அவர்கள் கயிலையைக் காண்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது.