பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 ஒளவை சு. துரைசாமி

“மலையடியில் களிறுகள் பிடியொடுவருது தெரிகிறது. இவ்வாறே கோழிபெடையொடுகூடிக் குளிர்ந்து வருவதும், வரிக்குயில்கள் பெடையொடு ஆடி வைகி வருவதும், பேடைகள் மயிற் சேவலொடும் கூடி வருவதும் பிறவும் காணக் காண நாவரசர்க்கு இன்பம் மிக்குப் பொலிகின்றது. அன்பு அளவு கடந்து பெருகுகிறது. அதனை உணர்ந்து

“அளவுபடாததோர் அன்போடு

ஐயாறடைகின்றபோது இளமணநாகு தழுவி ஏறுவருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டறியாதன கண்டேன்”

என்று பாடுகின்றார்.

பாட்டுத் தோறும் உயிர்கள் பலவும் ஆணும் பெண்ணுமாய்க் கூடி மகிழ்ந்து வரக் கண்ட நாவுக்கரசர், அதுவே இறைவன் திருவடிக்காட்சி என்பாராய், “கண்டேன் அவர் திருப்பாதம்” என வுரைக்கின்றார். உலகுயிர்கள் ஆணும் பெண்ணுமாய் அன்பும் இன்பமும் உற்றுக் கூடிக் குலவித் தோன்றும் காட்சி சிவமும் சத்தியும் கலந்த சிவயோகக் காட்சி என்ற உண்மையைப் புலப்படுத்துவது காண்கின்றார்.

அக்காட்சியில் உளதாகும் பயன், காணப்படும் உலகினும் கண்டறிந்தோர் உரைத்த நூல்களினும் காணப்படாத நள்ளரிய சிவானந்த ஞான மாதல் புலப்பட, “கண்டறியாதன கண்டேன்” எனக்