பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 ஒளவை சு. துரைசாமி

கின்றார். திருவருள் நலத்தை “வருத்துவான் ஊன்றினானேல் மறித்து நோக்கு இல்லையன்றே” என்று சிறப்பிக்கின்றார். -

- இவ்வாறே திருக்கயிலாயத் திருத்தாண்டகம் அடிதோறும் சிவஞானக் கருவூலமாகத் திகழ்கிறது.

“சில்லுருவாய்ச் சென்று திண்டாய் போற்றி

தேவர் அறியாத தேவே போற்றி . புல்லுயிர்க்கும் பூட்சியுணர்த்தாய் போற்றி

போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி

பற்றி உலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி

கயிலைமலை யானே போற்றி போற்றி” என்ற திருத்தாண்டகம் எத்துணை ஆழமிக்க அரிய ஞானக் கருவறையாய் விளங்குகிறது காண்மின்.