பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பியும் ஞானசம்பந்தரும்

இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னே நம் தமிழ் நாட்டில் தோன்றித் தமிழும் சைவமும் உய்யத் திருநெறித் தமிழோதி நம்மை உய்வித்த பெருமக்களான சமய குரவர் நால்வர் பாலும் பேரன்பும் அதனால் அவர்பால் பேரீடுபாடு முற்று அவர்களை வியந்து பல தமிழ் நூல்கள் எழுதிய சான்றோர் பலராவர். அவருள் நம்பியாண் டார் நம்பிகள் தொன்மையும் முதன்மையு முடைய வராவர். இவர் தாம் பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில் ஞான சம்பந்தரையும் நாவரசரையும் நம்பியாரூரரையும் வியந்து பாடியுள்ளார். இன்னும், பதினோராந் திருமுறையில் ஞானசம்பந்தரையும் நாவரசரையும் இவர் புகழ்ந்து பாடிய நூல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள்ளே திருவந்தாதி நீங்கலாக ஏனையவை ஞான சம்பந்தருக்கும் நாவரசுக்கும் உரியனவாய் இருத்தலை நோக்கின்.