பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 ஒ. ஒளவை சு. துரைசாமி

இவ்விருபெருமக்கள் பாலும் நம்பிகட்குப் பெரு மதிப்பும் பேரீடுபாடும் உண்டென்பது புலப்படுகிறது. நம்பியாண்டார் நம்பிகள் இற்றைக்குத் தொள்ளாயிரமாண்டுகட்கு முன்பே, சோழநாட்டுத் திருநாரையிலே ஆதிசைவர் குடியிலே பிறந்தவர். இதனை “நாரையூரினில் ஆதிசைவமறையோன்பால், வையமெலா மீடேறச் சைவம் வாழ மாமணிபோல்” பிறந்தருளினாரெனத் திருமுறை கண்டபுராணம் கூறுகின்றது. பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்த இராசராச சோழன் காலத்தே இருந்தவர். அவன் மூவர் முதலிகள் வழங்கியருளிய சைவத் திருமுறைகளைப் பெறுதற்குத் துணைசெய்தவர். முதலேழு திருமுறைக்கும் நம்பியாண்டார் நம்பிகளே திருவருள் துணையாகக்கொண்டு இசை வகுத்தா ரென்றும் கூறுவர்.

நம்பியாண்டார் நம்பிகளின் பெற்றோர் பெயர் முதலியன விளங்கத் தெரிந்தில. இவர் இளமையி லேயே திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்றுப் பொல்லாப்பிள்ளையார் மேல் பாடிய திருவிரட்டைமணிமாலையும் தொகுக்கப் பெற்றிருக்கிறது. இராசராசன் திருமுன்பே திருமுறை தொகுக்கப்பெற்றதென்பது. “நம்பிகழல் மன்னர் பிரான் மகிழ்ந்திறைஞ்சச் சித்திதரும் இறை மொழிந்த திருமுகப்பாசுரமுதலா, உய்த்த பதிகங்களையுமொரு முறையர்ச் செய்க எனப் பத்திதருந் திருமுறைகள்