பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


158 இ ஒளவை சு. துரைசாமி

யிற் காணப்படாத திருவாதவூரை, கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில் -

“வருவா சகத்தினில் முற்றுணர்ந்தோன் வண்டில்லை

... • - மன்னாத் திருவாதவூர்ச் சிவபாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தரு திருக்கோவை கண்டேயு -

மற்றப்பொருளைத் தெருளாத வுள்ளத்தவர் கவிபாடிச் சிரிப்பிப்பரே” - (58) - என்று பாராட்டியுள்ளார்

- இவ்வாற்றால் நோக்கின், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரர் ஆகிய நால்வரையும் நம்பியாண்டார் நம்பி பாராட்டி யிருப்பது தெளிவாகும். ஆயினும், ஞானசம்பந்தரை மட்டில் ஆறு தமிழ் நூல்களாற் சிறப்பித்துப் பரவி யிருப்பது, அவர்பால் இந்நம்பிகட்கு இருந்த தனி மதிப்புப் பெரிதென்பது துணியப் படும்.

இவையாறும் ஆளுடையபிள்ளையார் திருவந் தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக் கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத் தொகை யென்பனவாகும். இவையாவும் ஞான சம்பந்தர் வரலாறு, அவர் செய்த அருட்செயல், அருளிய திருப்பதிகம், பிறந்த சீர்காழிப்பதியின் - சிறப்பு முதலியவற்றைப் பாராட்டிப் புகழ்கின்றன. இவற்றுள்ளும் ஆளுடையபிள்ளையார் திருத் தொகையில் வரலாற்று நிகழ்ச்சி முற்றும் கூறப்படு